dinamalar telegram
Advertisement

கல்வி துறை உத்தரவை கிடப்பில் போட்ட பள்ளி நிர்வாகங்கள்!

Share

கொரானாவால் வருமானம் இழந்த பல குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் பல அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.
பெரியகுளம் அருகே சில்வார்பட்டி மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு ஆசிரியர் பற்றாக்குறையை போக்க பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.
20 ஆசிரியர்கள் மாற்றம்
பெரியகுளம், தேவதானப்பட்டி, வடுகபட்டியில் உள்ள 5 உதவி பெறும் நடுநிலை பள்ளிகளில் உபரியாக உள்ள 20 இடைநிலை ஆசிரியர்களை சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றுப்பணியாக நியமித்து அக்.20ல் உத்தரவிட்டார்.
மாற்றுப்பணி பெற்ற ஆசிரியர்கள் மாறுதலாகி செல்ல ஆர்வமாக உள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகங்கள் ஆசிரியர்களை விடுவிக்காமல் கல்வி துறை உத்தரவை கிடப்பில் போட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் உள்ள 214 அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக 300 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கு சம்பளமாக ஆண்டுக்கு பலகோடி செலவிடப்படுகிறது.
இதனால் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் உள்ள கூடுதல் ஆசிரியர்களை கண்டறிந்து தேவையுள்ள பள்ளிகளுக்கு மாற்று பணி அல்லது பணி நிரவலில் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி கூறுகையில், இப்பிரச்னை பற்றி இன்று பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement