சென்னை: அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 40 கட்டட வடிவமைப்பு கல்லுாரிகளுக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
5,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.தகுதி பெற்றவர்களுக்கு இன்று தர வரிசை பட்டியல் வெளியாகிறது. தொடர்ந்து, அரசு பள்ளி மாணவர்கள், விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவுக்கு, நாளை மறுநாள் ஆன்லைன் கவுன்சிலிங்கில் விருப்ப பதிவு மேற்கொள்ளப்படுகிறது.
வரும் 28ம் தேதி உத்தேசஒதுக்கீடும், 29ம் தேதி இறுதி ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. பின், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 29ல் ஆன்லைன் கவுன்சிலிங் பதிவு துவங்க உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!