சென்னை: அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு, ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதை விரைந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்களுக்கான மாத ஊதியம், அரசிடமிருந்து தாமதமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், பல அரசு கல்லுாரிகளில், முதல் சுழற்சியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை.
இரண்டாவது சுழற்சியில் பணியாற்றும் விரிவுரையாளர்களுக்கு, சில கல்லுாரிகளில் மூன்று மாத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சில கல்லுாரிகளில் ஊதியமே வழங்கப்படவில்லை.
இது குறித்து, தமிழ்நாடு அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலர் தங்க முனியாண்டி சார்பில், உயர்கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்:
அனைத்து அரசு கல்லுாரிகளிலும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு நிலுவை தொகை பாக்கி இல்லாமல்,முழு ஊதியத்தை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க கல்லுாரிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும். பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின் ஊதியத்தை, கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!