1 முதல் 8ம் வகுப்புகள் நவ., முதல் வாரத்தில் துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பின்பு கவர்னர் தமிழிசை கூறியதாவது:
கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நம் பாதுகாப்பிற்காகவும், குடும்பத்தினர் மற்றும் சமுதாயத்தின் பாதுகாப்பிற்காகவும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.இன்று 25ம் தேதி நடைபெற இருக்கும் தடுப்பூசி முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நவம்பர் முதல் வாரத்தில், 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் ஏறக்குறைய 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல், ஒரு நாள் இடைவெளியில் பள்ளிக்கு மாணவர்கள் வருதல் போன்ற நடைமுறைகளை பின்பற்ற பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்து வருகிறது.
2 முதல் 8 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வை பாரத் பயோடெக் நிறுவனம் முடித்து, அதற் கான அனுமதி பெற முயற்சி நடைபெற்று வரு கிறது. இது மிகப்பெரிய சாதனை. கொரோனா சொட்டு மருந்தும் கண்டுபிடித்து உள்ளனர். புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!