அரசு பள்ளியில் புத்தக கொலு
புதுச்சேரி: ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நவராத்திரியை முன்னிட்டு புத்தக கொலு நடந்தது.
புதுச்சேரி துளிர் உதவிக்கரம் அறக்கட்டளை சார்பில் 5ம் ஆண்டு நவராத்திரியை முன்னிட்டு புத்தகக் கொலு நடந்து வருகிறது. எட்டாவது நாளாக நேற்று முன்தினம் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் நடந்த கொலு நிகழ்ச்சியில் பள்ளியின் தமிழ் விரிவுரையாளர் பூங்குழலி வரவேற்றார்.
பள்ளித் துணை முதல்வர் சண்முகமுருகன் தலைமை தாங்கினார். துளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பத்ரிநாத் நோக்கவுரை ஆற்றினார். மைலம் சிருஷ்டி கிராமத்தின் நிறுவனர் கார்த்திகேயன், புத்தக விமர்சனமாக இக்கிகாய் என்னும் புத்தகத்தை பற்றி பேசினார். மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!