dinamalar telegram
Advertisement

கல்வித்திறன் பாதிப்பு ஒரு தேசிய இழப்பு!

Share

தொடர் ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழு, பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளது. ஆன்லைன் வாயிலாக சமீபத்தில் நடந்த மாநாட்டில், குழந்தைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு - பி.ஜி.சி., ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் - யுனிசெப் மற்றும் ஸ்வானிதி இனிசியேட்டிவ் ஆகியவை இணைந்து பள்ளிகளை மீண்டும் திறப்பது மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட தொற்றுநோய் மீட்புக்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தன.
அதில், யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்ட்டிர மாநிலத்தில் மட்டும், கடந்த 14 மாதங்களில் 36 சதவிகித குழந்தைகளுக்கு எந்தவித கற்றல் உபகரணங்களும் கிடைக்கவில்லை; 16 சதவிகித குழந்தைகள் ஏற்கனவே வீடுகளுக்கு வெளியே வேலை செய்கிறார்கள்; அவர்கள் பள்ளிக்குத் திரும்பும் வாய்ப்பு குறைவு. இந்த தலைமுறை குழந்தைகளின் கற்றல் திறன் பாதிப்புகள் ஒரு தேசிய இழப்பு என்று தெரிவித்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement