dinamalar telegram
Advertisement

விடுதியை காலி செய்யுங்கள்: அண்ணா பல்கலை உத்தரவு

Share

சென்னை:அண்ணா பல்கலை வளாகத்தில் தங்கியுள்ள இறுதியாண்டு மாணவர்கள், விடுதிகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை விடுதி காப்பாளர் செந்தில்குமார் அனுப்பிய சுற்றறிக்கையில், சென்னை அண்ணா பல்கலையின் கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி வளாக விடுதியில் தங்கியுள்ள இறுதியாண்டு இன்ஜினியரிங் மாணவர்கள், தங்கள் விடுதிகளை இன்றைக்குள் காலி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அண்ணா பல்கலை வளாகத்தில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்குவிடுதி சேர்க்கை துவங்கியுள்ளது. இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 32 ஆயிரம் ரூபாய்; முதுநிலை மாணவர்களுக்கு, 34 ஆயிரம் ரூபாயும், ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.அக்., 25ம் தேதிக்குள் சேர்க்கை முடித்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் துவங்க உள்ளன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement