dinamalar telegram
Advertisement

ஆசிரியர் பயிற்றுனர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு

Share

மதுரை: சட்டப்பூர்வ தடை எதுவும் இல்லையெனில், ஆசிரியர் பயிற்றுனர் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம். மனுதாரர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஆசிரியர் பயிற்றுனர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்காக, பணி மூப்பு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது.
இதற்கு எதிராக சிலர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
அரசாணைப்படி பட்டியலை, பணி நியமனம் செய்த தேதி அடிப்படையில் தயாரிக்க வேண்டும். அதை பின்பற்றவில்லை.
காலிப் பணியிடம் இல்லாமல், பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பல ஆண்டுகளாக பணிபுரிகிறோம். ஆனால், 2014ல் பணி நிரவலில் நியமிக்கப்பட்ட 362 பேருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்கள், எங்களுக்கு பணியில் இளையவர்கள். இது சட்டவிரோதம். பட்டியலை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, குறிப்பிட்டனர்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பிறப்பித்த உத்தரவு:
மாணவர்கள், கல்வி நிறுவனங்களின் நலன் கருதி, பொது இடமாறுதல் கலந்தாய்வை நிறுத்தி வைக்க முடியாது. அதே சமயத்தில், மனுதாரர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். மனுதாரர்கள், நடப்பு கல்வியாண்டு பொது இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும்.
இந்த இடைக்கால உத்தரவு, இந்நீதிமன்றத்தில் மனு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். சட்டப்பூர்வமாக தடை ஏதுவும் இல்லையெனில், பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம். விசாரணை, மூன்று வாரங்கள் ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement