dinamalar telegram
Advertisement

முதுகலை மருத்துவப்படிப்பு: ஊக்க மதிப்பெண் கோரி வழக்கு

Share

மதுரை: முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பணிபுரியும் இடத்தின் தன்மைக்கேற்ப டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண் கோரிய வழக்கில், இதில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் அறிக்கையை அமல்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர்கள் ராஜாத்தி பாத்திமா உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனு:
எம்.பி.பி.எஸ்., மற்றும் மருத்துவ பட்டயப் படிப்பு முடித்துள்ளோம். அரசின் மகப் பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் (சீமாங்) பணிபுரிகிறோம். தொலைதுாரம், கடினமான பகுதியில் பணிபுரியும் டாக்டர்கள் முதுகலை மருத்துவப் படிப்பில் சேர ஊக்க மதிப்பெண் வழங்க வழிவகை உள்ளது.
இது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.செல்வம் தலைமையிலான குழு, என்.ஐ.சி.யு.,சீமாங், விபத்துக் காய சிகிச்சைப் பிரிவுகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும். இதற்கேற்ப இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும், என அறிக்கை சமர்ப்பித்தது. அதை தமிழக அரசு ஏற்றது.
நாங்கள் நீட் தேர்வில் போதிய மதிப்பெண் பெற்றுள்ளோம். ஊக்க மதிப்பெண் வழங்க வில்லை. அரசு, சுய நிதி மருத்துவக் கல்லுாரிகளில் முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. எங்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி:
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் அறிக்கையை அமல்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் அக்.,21ல் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement