dinamalar telegram
Advertisement

அறிவோம் என்.சி.எச்.எம்.ஜே.இ.இ.,

Share

அறிமுகம்:மத்திய அரசின் கீழ், 1982ம் ஆண்டு துவங்கப்பட்ட &'நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி’ என்ற அமைப்பு, நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசு நிதியுதவி பெறும் 21 கல்லூரிகள், மாநில அரசு நிதியுதவி பெறும் 26 கல்லூரிகள், 26 தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒரு பொதுத்துறை கல்வி நிறுவனம் ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளின் பாடத்திட்டங்களை அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது. இந்த கல்வி நிறுவனங்களின் மூலம் சான்றிதழ், டிப்ளமா, முதுநிலை டிப்ளமா, இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் என 11 தொழில்முறை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
முக்கிய படிப்புகள்:* பி.எஸ்சி., இன் ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் -ஜெனரிக்/ஸ்பஷலைசேஷன்* எம்.எஸ்சி., இன் ஹாஸ்பிடாலிட்டி அட்மினிஸ்ட்ரேஷன்* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் டயடிக்ஸ் அண்ட் ஹாஸ்பிட்டல் புட் சர்வீஸ்* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் அக்காமடேஷன் ஆப்ரேஷன்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட்* டிப்ளமா இன் புட் புரடக்‌ஷன் / புட் அண்ட் பிவரேஜ் சர்வீஸ் / பேக்கரி அண்ட் கன்பக்‌ஷனரி/ பிரன்ட் ஆபீஸ் ஆப்ரேஷன் / ஹவுஸ்கீப்பிங் ஆப்ரேஷன்* கிராப்ட்ஸ்மான்ஷிப் சர்டிபிகேட் கோர்ஸ் இன் புட் புரொடக்‌ஷன் / புட் அண்ட் பிவரேஜ் சர்வீஸ்
சேர்க்கை முறை:என்.சி.எச்.எம்.சி.டி., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற மாணவர்கள் ‘நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி’ நடத்தும் என்.சி.எச்.எம்.ஜே.இ.இ., என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். முதுநிலை படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறைகள்:நியுமெரிக்கல் எபிலிட்டி அண்ட் அனலிட்டிக்கல் ஆப்டிடியூட், ரீசனிங் அண்ட் லாஜிக்கல் டிடக்‌ஷன், ஜெனரல் நாலெஜ் அண்ட் கரண்ட் அபயர்ஸ், இங்கிலீஷ் லேங்குவேஜ் மற்றும் ஆப்டிடியூட் பார் சர்வீஸ் செக்டர் ஆகிய 5 பிரிவிகளின் கீழ் மொத்தம் 200 கேள்விகள் &'அப்ஜெக்ட்டிவ்’ முறையில் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் அதேநேரம் தவறான ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படுகிறது.
தேர்வு நேரம்: 3 மணிநேரங்கள்
தகுதிகள்: இளநிலை பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வை எழுத குறைந்தது 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 25 வயதிற்கும் குறைவாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20
விபரங்களுக்கு: http://nchm.nic.in மற்றும் https://nchmjee.nta.nic.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement