dinamalar telegram
Advertisement

ஆன்லைனில் சான்றிதழ்

Share

கொரானா தொற்றின் தாக்கம் இந்தியாவில் கடுமையாக இருக்கும் சூழலில், மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் ஊனமுற்றோர் சான்றிதழ்களை ஆன்லைனில் வழங்குவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
யு.டி.ஐ.டி., எனும் இணையதளத்தை பயன்படுத்தி மட்டுமே, அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஊனமுற்றோர் சான்றிதழை ஆன்லைன் முறையில் வழங்க வேண்டும் என மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்றைய கொரோனா வைரஸ் நெருக்கடியில், ​​மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக தங்களது சான்றிதழ்களைப் நேரடியாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களை அணுகி பெறமுடியாத நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, இத்தகைய திட்டம் ஜூன் 1ம் தேதி முதல் அமல் படுத்தப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்காக மத்திய, மாநில அரசாங்கம் வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள், சலுகைகள், உதவித்தொகைகளை பெற் இச்சான்றிதழ் பெறுவது மிக அவசியம் என்ற நிலையில், அரசின் இந்த அறிவிப்பால், மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement