dinamalar telegram
Advertisement

சி.வி.சி., தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Share

புதுடில்லி: சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல் தடுப்பு அமைப்பின் தலைமை கமிஷனராக உள்ள சஞ்சய் கோத்தாரி, அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, இந்த பதவிக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு தலைமை கமிஷனர் மற்றும் இரண்டு கமிஷனர்கள் அடங்கியது, மத்திய ஊழல் தடுப்பு அமைப்பு. தலைமை கமிஷனராக கடந்தாண்டு ஏப்.,ல் பதவியேற்ற சஞ்சய் கோத்தாரி, ஜூன் மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து காலியாகவுள்ள அந்த பதவிக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிப்போர், தாங்கள் இந்த பதவிக்கு எந்த விதத்தில் பொருத்தமானவர் என்பது குறித்து, 300 வார்த்தைகளில் எழுத்துமூலமாக தெரிவிக்க வேண்டும். ஜூன் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement