dinamalar telegram
Advertisement

கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ மாணவர்கள்

Share

கொரோனா இரண்டாம் அலையின் வேகம் தீவிரம் அடைந்துள்ளதால், பரிசோதனை மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில், டாக்டர், நர்ஸ் உள்ளிட்டோர், தொடர்ச்சியாக பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். சில இடங்களில், மருத்துவத்துறை பணியாளர்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது.
இதில் எடுக்கப்பட்டு உள்ள முடிவுகள் குறித்து, அதிகாரிகள் தெரிவித்ததாவது:
மாநிலங்களில், வைரஸ் பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளதால், மருத்துவத்துறை பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், மருத்துவக் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்களை, கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, மருத்துவ மேற்படிப்புக்கான, நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படும்.
அதேபோல், நர்சிங் கல்லுாரிகளில் இறுதி ஆண்டு பயில்வோரும், இந்த பணிகளில் பங்கேற்பர். இவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதுடன், அரசு பணிகளில் சேர முன்னுரிமை அளிக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பு, இன்று வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement