dinamalar telegram
Advertisement

அறிவோம் என்.சி.எச்.எம்.சி.டி.,

Share

விருந்தோம்பல் துறை சார்ந்த கல்வி மற்றும் பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தவும், கல்வி தரத்தை மேம்படுத்தவும் உரிய வழிகாட்டுதல்களையும் இந்த அமைப்பு மேற்கொள்வதோடு பல்வேறு படிப்புகளையும் நேரடியாக வழங்குகிறது.
வழங்கப்படும் படிப்புகள்:
முதுநிலை பட்டப்படிப்பு:எம்.எஸ்சி.,- ஹாஸ்ப்பிட்டாலிட்டி அட்மினிஸ்ட்ரேசன்
முதுநிலை டிப்ளமா படிப்புகள்:போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் டயட்டிக்ஸ் அண்ட் ஹாஸ்பிட்டல் புட் சர்வீஸ்போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் அக்கமொடேஷன் ஆப்ரேஷன்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட்
இளநிலை பட்டப்படிப்பு:பி.எஸ்சி., இன் ஹாஸ்பிட்டாலிட்டி அண்டு ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேசன்
டிப்ளமா படிப்புகள்:டிப்ளமா இன் புட் புரொடக்‌ஷன்டிப்ளமா இன் புட் அண்ட் பிரவரேஜ் சர்வீஸ்டிப்ளமா இன் பேக்கரி அண்டு கன்பெக்சனரிடிப்ளமா இன் பிரண்ட் ஆபீஸ் ஆப்ரேஷன்டிப்ளமா இன் ஹவுஸ்கீப்பிங் ஆப்ரேஷன்
சான்றிதழ் படிப்புகள்:கிராப்ட்ஸ்மென்ஷிப் சர்ட்டிபிகேட் கோர்ஸ் இன் புட் புரொடக்‌ஷன்கிராப்ட்ஸ்மென்ஷிப் சர்ட்டிபிகேட் கோர்ஸ் இன் புட் அண்ட் பிவரேஜ் சர்வீஸ்
சேர்க்கை முறை:இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் இணைந்து என்.சி.எச்.எம்.சி.டி., பட்டப்படிப்புகளை வழங்குகிறது. படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதியும், சேர்க்கை முறையும் மாறுபடுகிறது. குறிப்பாக, இளநிலை படிப்புகளில் சேர்க்கை பெற பிரத்யேக நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
என்.சி.எச்.எம்., - ஜே.இ.இ.,:மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட ’நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி’ஒரு தன்னாட்சி அமைப்பு நடத்தும் முக்கிய தேர்வுகளில் ஒன்று, ’நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் - ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்‌ஷாமினேஷன்’. முற்றிலும் கம்ப்யூட்டர் வாயிலாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.
நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 10
தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 12
விபரங்களுக்கு:http://nchm.nic.in/,https://nchmjee.nta.nic.in/

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement