dinamalar telegram
Advertisement

அனுமன் கதை கூறி ஆச்சர்யப்படுத்தும் மாணவர்கள்

Share

மதுரை: மார்கழி அமாவாசை, மூலம் நட்சத்திரத்தில் அவதரித்த ராமபக்தனான அனுமனின் ஜெயந்திவிழா இன்று நடக்கிறது.
மதுரை சின்மயா மிஷனில் அனுமன் சாலிசாவில் உள்ள ஸ்லோகங்களை தொடர் சொற்பொழிவாக 22 மாணவ, மாணவிகள் நிகழ்த்தி காட்டி அசத்தியுள்ளனர். இது ஒருநாளில் நிகழ்ந்த சாதனை இல்லை. சிறு வயதிலிருந்தே ராமகதைகளையும், அனுமன் கதைகளையும் கேட்டு வளர்ந்ததால் அனுமன் சாலிசா ஸ்லோகங்களை தொடர் சொற்பொழிவாக பேச முடிந்தது என்கின்றனர். அனுமன் கதையெல்லாம் இன்றைய இளம்தலைமுறை பேசுவது என்பது ஆச்சர்யம் அல்லவா.
அனுமன் எப்படி இவர்களை கவர்ந்தார் என்பது பற்றி கூறியதாவது:
தர்மத்தின் சேவகன் அனுமன்ஹரிராம், வேலம்மாள் பொறியியல் கல்லுாரி: மூன்றாமாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறேன். சின்மயா மிஷனில் சிறு வயதிலிருந்தே சுவாமிஜியிடம் ஸ்லோகங்கள் கேட்டு வளர்ந்தேன். ராமனின் துாதனான அனுமனை தர்மத்தின் சேவகனாக பார்க்க வேண்டும். உண்மை, நியாயம், சேவை மதிப்புகளை அனுமனிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஸ்லோகம் சொல்வதோடு மட்டுமின்றி இதன் மதிப்புகளையும் பின்பற்றுகிறேன்.
தடைகளை உடைத்த ராமநாமம்வர்ஷா, பிளஸ் 2, டி.வி.எஸ். மெட்ரிக் பள்ளி:அனுமனுக்கு மிகச்சிறந்த குணங்கள் எல்லாம் இருந்தாலும் எளிமையாக இருந்தார். இன்றைய தலைமுறைக்கு அவரது குணங்கள் தேவை. பெரியோர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். ராமநாமத்தை சொல்லும் போது எத்தகைய தடைகளும் நீங்கும் என்பது அனுமன் வாழ்வில் கண்ட நிஜம். அனுமன் வழியில் அவர் காட்டிய வழிமுறைகளை பின்பற்றி நாமும் வாழ்ந்தால் நல்லதே நடக்கும்.
விடாமுயற்சி பணிவு அவசியம் கஜோல், பிளஸ் 1, மகாத்மா பள்ளி:அனுமன் பற்றி நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிகப்பெரிய விஷயம் விடாமுயற்சி. இலங்கையை தாண்டுவதற்குள் அவர் எத்தனை தடைகளை கடக்க வேண்டியிருந்தது. எந்த இடத்திலும் தன் முயற்சியை விட்டு விடவில்லை. மற்றொன்று எவ்வளவு திறமைகள் இருந்தாலும் பணிவும் அவசியம் என்பதை அனுமன் வாழ்க்கை நமக்கு நினைவு படுத்தும்.
அனுமனின் ஐந்து வீரங்கள் அக் ஷரா, பிளஸ்1, அத்யாபனா பள்ளி:ராமனுக்கு துாதனாக அனுமன் தேர்ந்தெடுக்கப்பட்டதே மிகச்சிறந்த குணங்களை கொண்டிருந்ததால் தான். ஆஞ்சநேயர் என்று கூப்பிடுவது அனுமனுக்கு பிடிக்கும். குருவானவர் நம் அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை அளிக்கிறார். அதுபோல அனுமனும் பராக்கிரம சாலி தான். அவரின் தியாகம், பெருந்தன்மை, அறிவு, பணிவு, தைரியமாக போரிடும் திறன் இவையெல்லாம் நம் வாழ்க்கைக்கும் அவசியமானது.
முடிவெடுப்பதில் வல்லவர் அனுமன்ரக் ஷனா, மங்கையர்க்கரசி கல்லுாரி:அனுமன் வாழ்விலிருந்து கற்றுக் கொண்டது வாக்கையும் புத்தியையும் துாய்மையாக வைத்துக் கொள்வது தான். அனுமன் ஸ்லோகம் எல்லையில்லாதது. இறைவனிடம் வழிபடும் போதும் நாம் ஒரு சேவகனாக நிற்க வேண்டும், நமது குறைகளை கண்டறிந்து மீண்டு வரவேண்டும். முக்கிய விஷயங்களில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்பதை அனுமன் பாடல்கள் உணர்த்துகின்றன.
ஞாயிறுதோறும் இலவச பயிற்சிசுவாமி சிவயோகா னாந்தா, நிறுவனர், சின்மயா மிஷன்:படிப்பு மட்டுமின்றி தனிமனித ஒழுக்கம், அணுகுமுறை, தேச சேவை, பொறுப்புகளை எடுத்து செய்தல் ஆகியவற்றில் இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் அவசியம். இவை ராமாயணம், மகாபாரத நுால்களில் நிறைய சொல்லப்பட்டுள்ளன.
நவீன மேலாண்மையை விட பழைய நுால்களில் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அனுமன் சரிதத்தை புரிந்து கொள்வதன் மூலம் தலைமைப்பண்பு, சுயநலமின்றி செயல்படுதல், எந்த சூழ்நிலையிலும் திறம்பட நடந்து கொள்ளுதல் போன்ற பண்புகளை கற்றுக் கொள்ளலாம். அதற்காக யுவகேந்திரா என்ற பெயரில் 15 முதல் 27 வயது வரையுள்ள இளைஞர், இளைஞிகளுக்கு ஞாயிறுதோறும் காலை 10:45 - 12:00 மணி வரை ஆன்மிக வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றன என்றார்.
தொடர்புக்கு: 98424 30922.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Trichy Mahadevan - Coimbatore,India

    ஸ்ரீராம் ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம். வாழ்க வளமுடன்.

  • Trichy Mahadevan - Coimbatore,India

    ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம். வாழ்க வளமுடன்.

  • Trichy Mahadevan - Coimbatore,India

    ஜெய் ஸ்ரீராம்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement