மதுரை: சுயநிதி தொழில் கல்லுாரிகளில் சேரும் மிகவும் பிற்பட்ட, ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 15 சதவீத தகுதியான ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை உருவாக்க தமிழக அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி வடக்கன்குளம் கிரகாம்பெல் தாக்கல் செய்த பொதுநல மனு:
தொழில் படிப்பு சுயநிதி கல்லுாரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் நிர்ணயித்துள்ளது.
இத்தொகையை தற்போதைய பொருளாதார நெருக்கடியால் செலுத்த இயலாது. மக்களிடம் கருத்துக் கேட்கவும், இயற்கை நீதியை பின்பற்றவும் குழு தவறிவிட்டது. குழு நிர்ணயித்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.கொரோனா பாதிப்பு காலகட்டத்தை உணர்ந்து குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கிரகாம்பெல் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு: சுயநிதி தொழில் படிப்பு கல்லுாரிகளில் சேரும் மிகவும் பிற்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 15 சதவீத தகுதியான ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என கட்டண நிர்ணயக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதை நிறைவேற்ற திட்டம் உருவாக்க தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றனர்.
சுயநிதி கல்லூரி மாணவர்களுக்கு உதவ திட்டம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!