dinamalar telegram
Advertisement

சட்ட படிப்பு அரியர் தேர்வு சிண்டிகேட்டில் முடிவு

Share

சென்னை:சட்டப்படிப்புக்கான, அரியர் தேர்வு கால அட்டவணை குறித்து, சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சட்டப் பல்கலை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், இறுதி செமஸ்டர் தேர்வு தவிர்த்து, அரியர் தேர்வு உள்ளிட்ட மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், விசாரணையில் உள்ளது. இந்நிலையில், சட்டப் படிப்புக்கான அரியர் தேர்வுகளை நடத்தக்கோரி, உயர் நீதிமன்றத்தில், சட்டக் கல்லுாரி மாணவர் சஞ்சய்காந்தி மனு தாக்கல் செய்தார்.
இம்மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, அரியர் தேர்வு நடத்துவது குறித்த கால அட்டவணை தொடர்பாக, சிண்டிகேட் குழுவில் முடிவெடுக்கப்படும், என்றார்.அதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை, வரும், 18ம் தேதிக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement