dinamalar telegram
Advertisement

சாதனை சிறுமி கீதாஞ்சலி டைம் பத்திரிகை தேர்வு

Share

வாஷிங்டன்: தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பல்வேறு சமூக மாற்றங்களுக்கு வித்திட்ட, இந்திய வம்சாவளியை சேர்ந்த, சிறுமி கீதாஞ்சலி ராவை, சாதனை சிறுமியாக, டைம் பத்திரிகை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி சிறுமி கீதாஞ்சலி ராவ், 15. இவர், கைன்ட்லி என்ற, மொபைல் செயலியை உருவாக்கினார். இது, ஆன்லைன் துன்புறுத்தல்களை, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, பயனாளியை எச்சரிக்கும் திறன் கொண்டது. ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு திறன் உதவியுடன், இந்த செயலி இயங்குகிறது.
மேலும், டெத்திஸ் என்ற பெயரில், இவர் உருவாக்கிய செயலி, குடிநீரில் இருக்கும் அசுத்தத்தின் அளவை கணக்கிட உதவுகிறது. இவரை, சிறந்த சிறுமியாக அமெரிக்காவின், டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement