dinamalar telegram
Advertisement

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும்

Share

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. அதன்படி, இந்தாண்டே, மொத்தம் 313 எம்.பி.பி.எஸ்., இடங்களிலும், 92 பல் மருத்துவ இடங்களிலும் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு கவுன்சிலிங் நடந்தது.
அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத்துறை பள்ளி மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கல்வி மற்றும் இதர செலவினங்களை வழங்குவதற்காக கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என 18 ம் தேதி நடந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான சேர்க்கை உத்தரவு வழங்கும் விழாவில் அறிவித்தேன்.
இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேர உத்தரவு கிடைத்துள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக செலுத்தும் விதம், தமிழக மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டுள்ளேன்.
அந்நிதியில் இருந்து மாணவர்களின் கல்வி, விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அ.தி.மு.க.,அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும். அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்த பின்பும், தி.மு.க., உதவுவதாக அறிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகம். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement