dinamalar telegram
Advertisement

குறைக்கப்பட்ட கல்வி கட்டணம்: அறிவிக்குமா பள்ளி கல்வி துறை?

Share

கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகம் முழுதும், பள்ளி, கல்லுாரிகள், இன்னும் திறக்கப்படவில்லை. &'ஆன்லைன்&' வழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி, &'டிவி&' வழியே, வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், மாணவர்களிடம், இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணம் கேட்டு, பல தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தின.
இது குறித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதில், &'கடந்த கல்வி ஆண்டில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் இருந்து, 75 சதவீதத்தை மட்டும், இந்த ஆண்டு பெற்று கொள்ளலாம்&' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, முதல் தவணையாக, ஆகஸ்ட், 1க்குள், 40 சதவீத கட்டணம் வசூலிக்கலாம். அதன்பின், இரண்டு மாதங்கள் கழித்து, அதாவது அக்டோபருக்கு பின், 35 சதவீத கட்டணம் வசூலிக்கலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், பெரும்பாலான பள்ளிகள், 40 சதவீத கட்டணத்தை, பெற்றோரிடம் வசூலித்து விட்டன. மீதமுள்ள தொகையை, அக்டோபருக்கு பின் மட்டுமே பெற வேண்டும். ஆனால், தற்போதே, இரண்டாவது தவணை தொகையை செலுத்த வேண்டும் என, பல பள்ளிகள், மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றன.
இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது:
கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் நிலையில், இன்னும் தனி நபர் வருவாய் உயராத நிலையில், பள்ளிகளில் மீதமுள்ள கட்டணத்தை செலுத்த வற்புறுத்துகின்றனர். அதிலும், கடந்த ஆண்டு வசூலித்த கட்டணத்தையே, தற்போதும் நிர்ணயித்துள்ளனர். எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 2019ம் ஆண்டு கல்வி கட்டணத்தின், 75 சதவீதம் எவ்வளவு என்பதை, பள்ளி கல்வி துறை அறிவித்து, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் குறைக்கப்பட்ட கட்டணத்தை, பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement