LOGIN
dinamalar telegram
Advertisement

சென்னை அண்ணா பல்கலைக்கு உயர் அந்தஸ்து: சேஷாத்திரி கருத்து

Share

மதுரை: சென்னை அண்ணா பல்கலைக்கு உயர் அந்தஸ்து கிடைக்க துணைவேந்தர் சூரப்பா எடுத்துள்ள நடவடிக்கை, உயர்வகை ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும், என, அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்திரி தெரிவித்தார்.
10 நிறுவனங்கள்
அவர் கூறியதாவது:நாட்டில் உள்ள, 10 பொது பல்கலை மற்றும், 10 தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உயர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பது, மத்திய அரசு, 2017ல் எடுத்த முடிவு. இதன்படி அண்ணா பொறியியல் மற்றும் கோல்கட்டா ஜாதவ்பூர் பல்கலைகள், உயர் அந்தஸ்து வழங்க தேர்வு செய்யப் பட்டன.
இதன்மூலம் ஆண்டிற்கு, 200 கோடி ரூபாய் வீதம், ஐந்து ஆண்டுகளுக்கு, 1,000 கோடி ரூபாய் நிதியுதவி கிடைக்கும். யு.ஜி.சி., மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டில் இருந்து, இப்பல்கலைகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து கிடைக்கும். பாடத்திட்டங்கள் உருவாக்குவது முதல் டிகிரி வழங்குவது வரை, பல்கலையே சுதந்திரமாக முடிவு எடுக்க முடியும். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், 30 சதவீதம் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை மேற்கொள்ள முடியும். தனி நிர்வாகக் குழு மூலம் இப்பல்கலை செயல்பட முடியும்.
அதிகரிக்கும்
குறிப்பாக, வேலைவாய்ப்புக்கு ஏற்ற பாடத்திட்டங்களை சுயமாக வகுத்துக் கொள்ள முடியும். புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் பாடத் திட்டங்களை, விருப்பம் போல் உருவாக்கலாம். வெளிநாடுகளில் உள்ளது போல், தொழில் நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, ஒப்பந்தங்கள் மூலம் பல்கலை வருவாயை அதிகரிக்க வாய்ப்பு கிடைக்கும்.
இட ஒதுக்கீடு பாதிக்காது
உயர் அந்தஸ்து கிடைப்பதால், தமிழகத்தில் இட ஒதுக்கீடு பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. இது தொடர்பாக, தமிழக அரசு கேட்ட விளக்கத்திற்கு, தெளிவாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இதன்படி, அந்தந்த மாநில இட ஒதுக்கீடு கொள்கைகள் அல்லது பல்கலை சட்ட விதிகள் தான் பின்பற்றப்படும். எந்த சலுகைகளும் பறிக்கப்படாது.
இது தொடர்பான மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக உத்தரவு குறித்து, 2019 டிச., 18ல், தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.ஆனால், தற்போது இந்த விஷயத்தில் தமிழக அரசு அரசியல் செய்கிறது. அண்ணா பல்கலையின் கீழ் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், முன்பிருந்த நிலையே தொடரும்.
அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., போன்ற கட்சிகள், பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்கள், துணை வேந்தர்களுக்கு ஜாதி ரீதியாக பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற நிலையில் தான் அரசியல் செய்கின்றன. தரமான துணைவேந்தர்கள் வேண்டும் என கேட்பதில்லை.ஏலம் மூலம் பதவிக்கு வரும் துணைவேந்தர்கள் மூலம், அரசியல் கட்சிகள் ஆதாயம் பெறும் வகையில் தான் உயர்கல்வி உள்ளது.
எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை தாண்டி, விரைவில் இதற்கான உயர் அந்தஸ்து பெற்று, மேம்பட்ட ஒரு கல்வி நிறுவனம் மாநிலத்தில் அமைய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement