LOGIN
dinamalar telegram
Advertisement

இன்ஜி., தரவரிசை வெளியீடு அக்., 1ல் கவுன்சிலிங் துவக்கம்

Share

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நேற்று வெளியிட்டார்.
அத்துடன், தொழிற்கல்வி மற்றும் பொது பாடப் பிரிவில், முதலிடம் பெற்ற மாணவ - மாணவியரின் விபரங்களும் வெளியிடப்பட்டன. மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தேதிகளும் அறிவிக்கப்பட்டன. மொத்தம், 1.63 லட்சம் இடங்களுக்கு, 1.12 லட்சம் பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
அமைச்சர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்புகள்:
 சிறப்பு ஒதுக்கீடுக்கு தகுதி பெற்ற, மாற்றுத் திறனாளி, முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங், வரும், 1ம் தேதி முதல், 5ம் தேதி வரை நடத்தப்படும் பொது பாடப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், 8ம் தேதி துவங்கும்; நான்கு கட்டங்களாக, 27ம் தேதி வரை நடக்கும் தொழிற்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு, 8ம் தேதி துவங்கி, 15ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக கவுன்சிலிங் நடக்கும் துணை கவுன்சிலிங், அருந்ததியர் பிரிவில் காலியிடங்களை நிரப்புதல் போன்றவை, அக்., 29, 30ம் தேதிகளில் நடக்கும் அனைத்து மாணவர்களுக்கும், ஆன்லைனில் கவுன்சிலிங் நடக்கும்.
இது குறித்த அனைத்து விபரங்களும், மாணவர்களின், இ - மெயில் முகவரி மற்றும் மொபைல் போன் எண்ணில் தெரிவிக்கப்படும். மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்த, இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் தரவரிசை பட்டியலில் தவறு இருந்தால், வரும், 1ம் தேதிக்குள் கவுன்சிலிங் சேவை மையம் வழியாகவோ, போன் வழியாகவோ கவுன்சிலிங் கமிட்டிக்கு தெரிவிக்கலாம். பிழை இருந்தால் சரி செய்யப்படும் கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.61 லட்சம் பேர் பதிவு செய்தனர். அவர்களில், 1.31 லட்சம் பேர் கட்டணம் செலுத்தினர். 1.15 லட்சம் பேர் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்பு செய்துள்ளனர்.
இறுதியாக, 1.12 லட்சம் பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் கவுன்சிலிங்கிற்கு தகுதி பெற்றவர்களில், 1,533 பேர் தொழிற்கல்வி பாடப்பிரிவு படித்தவர்கள். ௪1 ஆயிரம் மாணவியரும், 72 ஆயிரம் மாணவர்களும் தகுதி பெற்றுள்ளனர். மற்ற பாலினத்தவர், 15 பேரும் இன்ஜி., சேர தகுதி பெற்றுள்ளனர் விளையாட்டு பிரிவில், 1,409; மாற்றுத்திறனாளிகளில், 149; முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், 855 பேர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு, அமைச்சர் அறிவித்தார்.
51 ஆயிரம் இடம் காலி 27 கல்லுாரிகள் மூடல்
இந்த ஆண்டு, 461 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள, 1.63 லட்சம் இடங்களுக்கு சேர்க்கை நடக்கிறது. அதில், 1.36 லட்சம் இடங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்கள்; 27 ஆயிரம் இடங்கள், நிர்வாக பிரிவு இடங்களாக இருந்து, அரசு ஒதுக்கீட்டுக்கு கல்லுாரிகளால் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு, 1.12 லட்சம் பேர் மட்டுமே, கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளனர்.
அதனால், கவுன்சிலிங் நடக்கும் முன், 51 ஆயிரம் இடங்கள், மாணவர்கள் இன்றி காலியாகியுள்ளன. கடந்த ஆண்டு, 480 கல்லுாரிகள் மாணவர்களை சேர்த்த நிலையில், இந்த ஆண்டு, 27 கல்லுாரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாகவும், நிறுவனத்தை மூட உள்ளதாகவும் அறிவித்துள்ளன. எட்டு கல்லுாரிகள் மாணவர் சேர்க்கை நடத்த, புதிதாக அனுமதி பெற்றுள்ளன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement