LOGIN
dinamalar telegram
Advertisement

தேர்வெழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளதா?

Share

புதுடில்லி: சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோருக்கு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து வசதி குறித்து, அறிக்கை அளிக்கும்படி, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட, 25 வகையான பணிகளுக்கான, முதல் நிலை தேர்வு, அக்.,4ல் நடக்க உள்ளது; இதை தள்ளி வைக்கக் கோரி, தேர்வில் பங்கேற்கும், மாணவர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா பரவல் தீவிரமாக உள்ள சூழலில், மாணவர்கள் தேர்வெழுத வருவது, ஆபத்தானது. பல மாநிலங்களில், போக்குவரத்து வசதி இன்னும் சீராகாத நிலையில், மாணவர்கள், தேர்வில் பங்கேற்பது சிரமம். எனவே, மாணவர்களின் நலனை கருதி, சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகளை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு, தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்ட நிலையில், தேர்வை ஒத்தி வைக்க முடியாது என, யு.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி, ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு எத்தகைய போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட உள்ளன என்பது குறித்து, யு.பி.எஸ்.சி., இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட அமர்வு, விசாரணையை, நாளை ஒத்தி வைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்தேர்வெழுத அனுமதிதேசிய சட்டப் பல்கலை நடத்தும், சட்டக் கல்விக்கான, கிளாட் நுழைவுத் தேர்வு நேற்று மதியம் நடந்தது. இத்தேர்வில், கொரோனா பாதித்தவர்களுக்கு அனுமதி இல்லை என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, மத்திய பிரதேசம், குவாலியரைச் சேர்ந்த, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர், தீபன்ஷ் திரிபாதி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நேற்று காலை, இந்த மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்றம், தீபன்ஷ் திரிபாதி தேர்வு எழுத தனி அறை ஒதுக்கித் தரும்படி உத்தரவிட்டது. தேர்வு துவங்க, சில மணி நேரங்களுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவால், தீபன்ஷ் திரிபாதி, தேர்வு எழுதினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement