LOGIN
dinamalar telegram
Advertisement

நீட் தேர்வை எதிர்த்து அனிதாவின் சகோதரர் பட்டினி போராட்டம்

Share

பெரம்பலுார்: நீட் தேர்வை எதிர்த்து, அனிதாவின் சகோதரர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நீட் தேர்வை எதிர்த்து, சென்னையில், மக்கள் பாதை அமைப்பினர், கடந்த ஆறு நாட்களாக, தொடர் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வால் தற்கொலை செய்த அனிதா வின் அண்ணன் மணிரத்னம், அந்த போராட்டத் துக்கு ஆதரவாக, அரியலுார் மாவட்டம், குழுமூர் கிராமத்தில் உள்ள அனிதா நினைவு நுாலக வளாகத்தில், பட்டினிப்போராட்டத்தை துவங்கினார்.
நேற்று காலை, 8:௦௦ மணிக்கு போராட்டம் துவங்கிய அவருடன் குழுமூர் கிராமத்தை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் வீரராகவன், சுபாஷ்சந்திரபோஸ் பங்கேற்றனர்.
இது குறித்து, அனிதா அண்ணன் மணிரத்னம் கூறியதாவது:
மக்கள் பாதை அமைப்பினர், நீட் எதிர்த்து, சென்னையில், தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் வெற்றி பெற வாழ்த் துக்கள். பட்டினி போராட்டம் நடத்தினாலும், உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தாலும், இந்த அரசு கண்டுகொள்ளப் போவதில்லை. இருப்பினும் ஆதரவளிக்கும் வகையில், ஒரு நாள் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். இவ்வாறு கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement