LOGIN
dinamalar telegram
Advertisement

காரைக்குடி அழகப்பா பல்கலை., இணைய வழி மாதிரித் தேர்வு

Share

காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள், மற்றும் இணைப்பு கல்லுாரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இணையவழியாக மாதிரித் தேர்வு நடந்தது.
இதில், 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். மாதிரித் தேர்வை மாணவர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே எழுதினர்.
துணைவேந்தர் ராஜேந்திரன் கூறியதாவது:
இணையவழித் மாதிரித் தேர்வானது, காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை பல்கலை., மாணவர்களுக்கும், மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இணைப்புகல்லுாரிகளின் அறிவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கும் நடந்தது.
முதல் ஒரு மணி நேரம் வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கும், அடுத்த ஒரு மணிநேரம் மாதிரி தேர்வு எழுதுவதற்கும் மற்றும் அடுத்த ஒருமணி நேரம் எழுதிய விடைத்தாளை ஸ்கேன் செய்து பி.டி.எப்., வடிவில் பல்கலை., இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டது.
இணைப்புக் கல்லுாரிகளின் கலைப்பிரிவு மாணவர்களுக்கு இன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மாதிரி இணையவழித் தேர்வு நடக்கிறது. இறுதியாண்டு மாணவர்களுக்காக, இறுதி பருவத்தேர்வு செப்.19 முதல் செப்.30 வரை இணையம் வழியாக நடக்கிறது. இணையம் வழியாக பதிவேற்றம் செய்யப்பட்ட விடைத்தாள்கள், இணையம் வழியாகவே மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவு விரைவில் அறிவிக்கப்படும், என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement