LOGIN
dinamalar telegram
Advertisement

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு தமிழ் புலமை தேர்வு

Share

தமிழகத்தில் அரசு பதவிகளில் சேருவோருக்கு தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் முதல் அனைத்து அலுவலர்களும் பணிக்கு வந்த குறிப்பிட்ட காலத்தில் தமிழை படிக்க வேண்டும். மேலும் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த கல்வி ஆண்டுக்கான தமிழ் மொழி புலமை தேர்வு அக். 5 முதல் நடக்க உள்ளது. அதே போல் தமிழ் புலமை தேர்வுக்கான அரையாண்டு தேர்வும் நடக்க உள்ளது. இதில் ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். - ஐ.எப்.எஸ். அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்கலாம்.
தேர்வு எழுத விரும்புவோர் செப். 23ம் தேதிக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement