Advertisement

மாணவர் சேர்க்கை குறைவால் 13 பி.எட்., கல்லுாரிகள் மூடல்

Share

சென்னை: தமிழகத்தில், 13 பி.எட்., கல்லுாரிகள், மாணவர் சேர்க்கையை நிறுத்தி, கல்லுாரிகளை மூட முடிவு செய்துள்ளன.
பட்டப்படிப்பு முடிக்கும் இளைஞர்கள், ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் கல்வியியல் படிப்பான, பி.எட்., படிக்க வேண்டும். பி.எட்., படிப்புக்காக, தமிழகத்தில், 700 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன், பி.எட்., படிப்பானது, ஓராண்டில் இருந்து இரண்டாண்டாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக, பி.எட்., படிப்பதற்கு கூடுதல் செலவு ஏற்பட்டது. பல ஏழை, நடுத்தர குடும்பத்தினர், பி.எட்., படிக்கும் முடிவை மாற்றினர். அதனால், தமிழகத்தில், பி.எட்., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை பெருமளவு குறைந்து உள்ளது.
ஆண்டுதோறும், 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வருகின்றன. இந்த ஆண்டில், 13 கல்லுாரிகள், தங்களுக்கு புதிதாக மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனுமதிவேண்டாம் என, கல்வியியல் பல்கலையிடம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தி, அவர்களுக்கு பட்டம் கொடுப்பதுடன்,கல்லுாரிகளை மூட உள்ளதாகவும் கூறி உள்ளன.
கல்வியியல் கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:
பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகளாக மாற்றியதால், செலவு அதிகமாகி, மாணவர் எண்ணிக்கை குறைந்து உள்ளது. தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, புதிதாக ஆசிரியர்கள் பணிக்கும், ஆட்கள் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவும், பி.எட்., படிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அதையும் மீறி கல்லுாரிகளை நடத்த விரும்பினாலும், ஆசிரியர் பல்கலையில் இணைப்பு அந்தஸ்து பெறுவது, மாணவர் சேர்க்கைக்கான ஒப்புதல் பெறுவது, பேராசிரியர் நியமனத்துக்கு அனுமதி பெறுவது போன்ற நடைமுறைகள் எளிதாக இல்லை.பல்கலை அதிகாரிகள், உயர்கல்வி துறையினரை, பல விதங்களில் சமாளிக்க வேண்டியுள்ளது. அதனால், பல கல்லுாரி நிர்வாகங்கள் அதிருப்தியில் உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement