Advertisement

தர வரிசைப் பட்டியலில் 9வது இடத்தில் புதுச்சேரி பல்கலை

Share

அவுட்லுக் - ஐகேர் அமைப்பும், என்.ஐ.ஆர்.எப்., அமைப்பும் இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, தர வரிசைப் பட்டியலை வெளியிடுகின்றன. அதுபோல, பிரிட்டனில் உள்ள டைம்ஸ் உயர்கல்வி பல்கலைக்கழகம் என்ற அமைப்பு, சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிடுகிறது.
இந்நிலையில், அவுட்லுக் - ஐகேர் அமைப்பு தற்போது வெளியிட்டுள்ள தர வரிசைப் பட்டியலில், நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களுக்கு மத்தியில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 9வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பிரிவில் 45 இடத்தை பெற்றுள்ளது. கடந்த 2019ம் ஆண்டின் தர வரிசையில் புதுச்சேரி பல்கலைக்கழகம், மத்திய பல்கலைக் கழகங்களில் 11வது இடத்தை பெற்றது.
தற்போது, 2 இடங்கள் முன்னேறி 9வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம், நாட்டின் சிறந்த மத்திய பல்கலைக் கழகங்களில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது என்ற உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது. மேலும், 2019ம் ஆண்டின் பல்கலைக்கழங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பிரிவு தர வரிசையில் புதுச்சேரி பல்கலைக் கழகம் 67 வது இடத்தை பெற்றது. தற்போது, 22 இடங்கள் முன்னேறி 45வது இடத்தை பிடித்ததுடன், நாட்டின் சிறந்த 50 கல்வி நிறுவனங்களில் ஒன்றாக முத்திரை பதித்துள்ளது.
தர வரிசை கணக்கீட்டில் ஒட்டுமொத்த 1000 புள்ளிகளில் 647.63 புள்ளிகளை புதுச்சேரி பல்கலைக் கழகம் பெற்றுள்ளது. கல்வி, ஆராய்ச்சிக்காக 277.20 புள்ளிகளையும், தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு மற்றும் வேலை வாய்ப்புக்காக 134.62 புள்ளிகள், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்காக 77.53 புள்ளிகள், நிர்வாகம் மற்றும் சேர்க்கைக்காக 99.6 புள்ளிகள், மற்ற செயல்பாடுகளுக்கு 58.68 புள்ளிகளையும் பெற்றுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த 3 ஆண்டுகளில் தொடர்ச்சியாக பல தர வரிசைப் பட்டியல் குறித்த போட்டியில் பங்கேற்று, தனது செயல்திறனை மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய உச்சம் தொடுவோம்
மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் புதிய பாடங்கள் துவக்கப்படும்.
மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உதவும் வகையில் சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதில் கவனம் செலுத்தப்படும். மான்யக் குழு வழங்கியுள்ள 206.94 கோடி ரூபாயை முழுமையாக பயன்படுத்தி பல்கலைக் கழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் புதுச்சேரி பல்கலைக்கழகம் மேலும் பல புதிய உச்சங்களை தொடும். - குர்மீத் சிங், துணைவேந்தர், புதுச்சேரி பல்கலைக்கழகம்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement