Advertisement

அரசின் வல்லுநர்கள் குழுவில் மாநில தலைவர் வலியுறுத்தல்

Share

மதுரை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் சாதக பாதகங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு அமைக்கும் வல்லுநர் குழுவில் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் சங்கங்கள் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மகேந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்திட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடங்களை ஒதுக்கிட முடிவெடுத்துள்ள அரசின் முடிவை சங்கம் பாராட்டுகிறது. அனைவருக்கும் தரமான சமமான கல்வி இலவச கல்வி கிடைக்க மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. மழலையர் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை பல சீர்திருத்தங்களை வெளியிட்டுள்ளது.
நிர்வாகம் நிதி ஆகிவற்றில் பல்வேறு சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது இரு மொழி கொள்கையே தொடரும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் சாதக பாதககங்கள் குறித்து ஆய்வு செய்திட வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அரசு அமைக்கும் குழுவில் ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும் என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement