Advertisement

தேசிய கல்வி கொள்கைக்கு ஏ.பி.வி.பி. வரவேற்பு

Share

மதுரை: தமிழக ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பு தேசிய கல்வி கொள்கையை முழுமனதாக வரவேற்கிறது என தென் தமிழக மாநில செயலாளர் சுசிலா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
பல ஆண்டுகளுக்கு பின் தேசத்திற்கான கொள்கையாக இது வந்துள்ளது. மாணவர்கள் திறமை தொழில்நுட்பகல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தாய் மொழிக்கான முக்கியத்துவம் வரவேற்கத்தக்கது. தேசிய கல்விக் கொள்கையின் மீது பொய் பிரசாரம் வதந்தி பரப்பப்படுவதை மாணவர்கள் நம்ப வேண்டாம். தேசிய கல்வி கொள்கை குறித்து தமிழக பல்கலை கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.
மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழி கற்றால் மொழிப் புலமை ஏற்படும். இந்த வாய்ப்பை அரசு பறிப்பது முறையல்ல. தமிழகத்தில் மும்மொழி கொள்கை குறித்து மாணவர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.இது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு கவர்னர் முதல்வருக்கு அனுப்பப்படும் என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement