Advertisement

பிளஸ் 2 மறுதேர்வுக்கு ஹால் டிக்கெட்

Share

சென்னை: பிளஸ் 2 மறுதேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு, மார்ச், 24ல் முடிந்தது. கடைசி நாள் தேர்வன்று, கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், 37 ஆயிரம் மாணவர்கள் அன்றைய தேர்வை எழுதவில்லை. அவர்களுக்கான மறுதேர்வு, வரும், 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால், தேர்வெழுதாதோரில், 780 மாணவர்கள் மட்டுமே, தேர்வை மீண்டும் எழுத முன் வந்துள்ளனர். இந்த மாணவர்கள் படித்த பள்ளியிலேயே, தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு, இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு சென்று, ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். தனி தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement