Advertisement

பள்ளிக்கல்வி துறை ரூ.70 கோடி நிதியுதவி

Share

கோபி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முதல்வரின் நிவாரண நிதிக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், 70 கோடி ரூபாய் வழங்கப்படும், என, அத்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித் துறை சார்பில், முதல்வரின் நிவாரண நிதிக்காக, 70 கோடி ரூபாய் வழங்கப்படும். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின் பங்களிப்பில், ஒரு நாள் சம்பளம் நிதியாக வழங்கப்படும். 10ம் வகுப்பு மாணவர்களுக்காக, யூ - டியூப் மூலம் செயல் திட்டங்கள் வகுத்து, நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதை மாணவ - மாணவியர், மொபைல் போன், &'டிவி&' மூலம், வீட்டில் இருந்தே கற்கலாம். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, பள்ளிக்கல்வித் துறை எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஊரடங்கு உத்தரவை தளர்த்திய பின், முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement