Advertisement

கல்லூரி வளாகத்தில் வணிக பயன்பாடு?


சென்னை: பள்ளி, கல்லுாரி வளாகங்களை, வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என்பதற்கான சுற்றறிக்கையை, கல்வி நிறுவனங்களுக்கு அனுப்ப உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம், 2019 ல், சென்னை லயோலா கல்லுாரியில் நடப்பதாக இருந்தது. பின், இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், கல்லுாரி வளாகத்தை, பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதித்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சுஜிதா என்பவர் மனு தாக்கல் செய்தார். பின், பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. லயோலா கல்லுாரி தரப்பில், விரிவான பதில் மனு தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.உயர் கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை, வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என, ஏற்கனவே அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதுபோல், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, கூறப்பட்டது.இதையடுத்து, வழக்கு விசாரணையை, ஏப்., 9 க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement