Advertisement

நீட் தேர்வு முறைகேடு


நீட் தேர்வில் நடந்த ஆள் மாறாட்டம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆள்மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த, சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா உட்பட, ஆறு மாணவர்கள், அவர்களின் பெற்றோர், இடைத்தரகர்கள் என, 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், 12 பேருக்கு ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில், சென்னை, ராமாபுரத்தில் உள்ள, பிரபல கல்லுாரி ஒன்றில் படித்து வந்த, கிருஷ்ண கிரி மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரன், இடைத்தரகர் மனோகரன் ஆகியோரும் ஜாமின் கோரி, தேனி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம், இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், மாணவர் பவித்ரனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியும், இடைத்தரகர் மனோகரனின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், நீட் தேர்வில், தமிழக மாணவர்களுக்கு பதிலாக தேர்வு எழுதிய, இரு பெண்கள் உட்பட, 10 பேரின் புகைப்படங்களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வெளியிட்டு, அவர்களை தேடி வருகின்றனர்.
சென்னை அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு படித்து வருபவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த, தனுஷ்.நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக, தனுஷை அழைத்து வந்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என, சி.பி.சி.ஐ.டி., வட்டாரங்கள் தெரிவித்தன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement