Advertisement

இன்லேக்ஸ் ஸ்காலர்ஷிப்


இம்பெரியல் காலேஜ் லண்டன், ராயல் காலேஜ் ஆப் ஆர்ட் - லண்டன், ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்டு ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் - லண்டன், யுனிவர்சிட்டி ஆப் கேம்ப்ரிட்ஜ் ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த உதவித்தொகையை வழங்கப்படுகிறது. சிறந்த இளம் இந்திய மாணவர்களது திறமையை மேலும் மேம்படுத்தும் வகையில் 1976ம் ஆண்டு முதல் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
படிப்பு நிலைகள்: முழுநேர முதுநிலை பட்டப்படிப்பு, எம்.பில்., மற்றும் பிஎச்.டி.,
துறைகள்:
இன்ஜினியரிங்,கம்ப்யூட்டர் சயின்ஸ்,பிசினஸ் ஸ்டடீஷ்,மெடிசின், டென்டிஸ்ட்ரி,பப்ளிக் ஹெல்த்,பேஷன் டிசைன்,மியூசிக்,பிலிம் அண்டு பிலிம் அனிமேஷன்.
உதவித்தொகை:கல்விக் கட்டணம், தங்குமிட செலவு, போக்குவரத்து செலவு, மருத்துவ காப்பீடு ஆகியவை இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 72 லட்சம் ரூபாயை பெறலாம்.
தகுதிகள்:இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குறைந்தது கடந்த 6 மாத காலமாக இந்தியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இந்திய கல்வி நிறுவனத்தில் முதல் வகுப்பில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு பரிந்துரை கடிதங்களுடன் என்ற ஆன்லைன் மற்றும் , applications@inlaksfoundation.org இ-மெயில் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பொதுவாக, மும்பை அல்லது டில்லியில் நேர்முகத்தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31
விபரங்களுக்கு: www.inlaksfoundation.org

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement