Advertisement

அமெரிக்காவில் யோகா பல்கலை; ஆகஸ்டில் பயிற்சி வகுப்புகள்


அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், யோகா பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள, முதல் யோகா பல்கலையான இதை, வாயு எனப்படும், விவேகானந்தா யோகா பல்கலை, 35.76 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைத்துள்ளது. இங்கு, சில மாதங்களில், வகுப்புகள் துவங்க உள்ளன.
இது குறித்து, பல்கலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
பல்கலையின் தலைவராக, &'கேஸ் வெஸ்டர்ன் பல்கலை&' பேராசிரியர் ஸ்ரீ ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய யோகா ஆசிரியரான, எச்.ஆர்.நாகேந்திராவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. யோகாவில், முதுநிலை பட்டப் படிப்பை பெற விரும்புவோர், இங்கு சேரலாம். வகுப்புகள், வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளன; அதற்கான சேர்க்கை, ஏப்ரல் மாதத்தில் துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த பல்கலை, நாடு முழுவதும் உள்ள முதன்மை பல்கலைகளுடன் இணைந்து, கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது. இதனால், யோகா, தியானம், உலகம் முழுவதும் சென்றடையும். இந்த பல்கலை மூலம், அமெரிக்காவில் உள்ள யோகா ஆசிரியர்கள் பெரிதும் பயனடைவர். கடந்த நவம்பர் மாதம், இந்த பல்கலையை நடத்துவதற்கான அங்கீகாரத்தை, கலிபோர்னியாவில் உள்ள, தனியார் முதுநிலை கல்விக்கான பணியகம் வழங்கியது. ஒப்புதல் வழங்கி மூன்று மாதங்களே ஆன நிலையில், பயிற்சி வகுப்புகள் துவங்கப்படுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement