Advertisement

3 மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்திய இளைஞர்

நாமக்கல்: உலக சாதனைக்காக, மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றி, நாமக்கல் இளைஞர் அசத்தினார்.
நாமக்கல், கணவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 23; ஏகலைவா கலைக்கூட செயலர். அரசு பள்ளி மாணவர்களுக்கு, யோகா மற்றும் இதர விளையாட்டுகள் கற்றுத் தருவது போல், சிலம்பமும் கற்றுத்தர வலியுறுத்தி வருகிறார்.இதற்காக, நாமக்கல் தெற்கு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று காலை, 8:00 - 11:00 மணி வரை, உலகச் சாதனை முயற்சியாக, சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.
இதற்கு முன், மதுரையில், சாந்தகுமார் என்ற இளைஞர், ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றியதே சாதனையாக இருந்தது. அதை முறியடிக்கும் வகையில், மோகன்ராஜ் தண்ணீர் அருந்தாமல், நிமிடத்துக்கு, 16 சிலம்பச் சுற்றுகள் வீதம், மூன்று மணி நேரத்தில், 2,080 முறை சுழற்றி சாதனை படைத்தார். நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு பதிவு செய்ததுடன், உலகச் சாதனைக்கான விருதை வழங்கியது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement