Advertisement

கீழடியில் அகழாய்வு 19ல் துவக்கம்

சென்னை: கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வை, நாளை மறுநாள், முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைக்க உள்ளார்.
சிவகங்கை மாவட்டம்,கீழடியில், 2015ல், மத்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்தது. அதில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கிடைத்தன. அதைத் தொடர்ந்து, இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வுகளை செய்தது.தமிழக தொல்லியல் துறை, 2018ல், நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுகளை மேற்கொண்டது. அவற்றில், 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட, தமிழ் எழுத்துக்களுடன் பானை ஓடுகள், அணிகலன்கள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவுக்குவளை உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. இந்நிலையில், ஆறாம் கட்ட அகழாய்வுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசும், அகழாய்வுக்காக, 32 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. அகழாய்வு பணி, வரும், 19ல் துவங்குகிறது. முதல்வர் இ.பி.எஸ்., சென்னையில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, ஆறாம் கட்ட அகழாய்வை துவக்கி வைக்க உள்ளார். தமிழக தொல்லியல் துறை, கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலுார் ஆகிய இடங்களிலும் ஆய்வுகளை செய்ய உள்ளது. அதைத் தொடர்ந்து, சிவகளை, கொடுமணல், ஆதிச்சநல்லுார் ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடக்க உள்ளது. இந்த அகழாய்வில், அரிய தொல்பொருட்கள் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement