Advertisement

குரூப் - 2ஏ முறைகேடு பெண்கள் உட்பட மூவர் கைது

சென்னை: டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு முறைகேடு தொடர்பாக, அரசு பெண் ஊழியர்கள் இருவர், இடைத்தரகர் ஒருவர் என மூன்று பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 4, குரூப் - 2ஏ தேர்வுகளில், நடந்த முறைகேடு குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
இந்நிலையில், குரூப் - 2ஏ முறைகேடு தொடர்பாக, வியாசர்பாடியை சேர்ந்த இடைத்தரகர் பாஸ்கர், 40 நேற்று சிக்கினர். மேலும், சென்னையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றிய, புதுப்பேட்டையை சேர்ந்த பூர்ணிமா தேவி, 25; வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அனிதா, 29 என்ற, இரு பெண் ஊழியர்களையும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர். பெண் ஊழியர்கள் இருவரும், ஜெயகுமாரிடம், தலா, 12 லட்சம் ரூபாய் கொடுத்து, தேர்வில் முறைகேடு செய்து, பணியில் சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, போலீஸ் காவலில் இருந்த முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயகுமார், காவல் முடிந்து, நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின், 12 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், அவரிடமிருந்து, 2.75 லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் பணியாற்றிய ஓம்காந்திடமிருந்து, இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement