Advertisement

அறிவோம் ஐ.ஐ.பி.இ.,

Share

அறிமுகம்இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் அண்டு எனர்ஜி சட்டம் -2017 எனும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களுக்கு இணையான தகுதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நிறுவனம், ஐ.ஐ.டி.,-காரக்பூர், ஐ.ஐ.டி.,-கவுகாத்தி, ஐ.ஐ.டி.,-சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்* பி.டெக்.,- பெட்ரோலியம் இன்ஜினியரிங்* பி.டெக்., - கெமிக்கல் இன்ஜினியரிங்
படிப்பு காலம்: 4 ஆண்டுகள்
சேர்க்கை இடங்கள்: ஒவ்வொரு படிப்பிலும் தலா 50 இடங்கள்
மாணவர் சேர்க்கை முறை:தேசிய அளவில் நடைபெறும் ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன் -ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலின் அடிப்படையில் இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஐ.ஐ.டி.,கள் கடைபிடிக்கும் இட ஒதுக்கீட்டு முறை இக்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
உதவித்தொகை: இன்ஸ்பயர் உதவித்தொகை திட்டத்தின்கீழ், தகுதியான மாணவர்கள் ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறலாம்.
உதயமாகும் புதிய துறைகள்:எர்த் சயின்சஸ், பெட்ரோலியம் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஆகிய துறைகளை உருவாக்கவும், அவற்றின் கீழ், பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விபரங்களுக்கு: http://iipe.ac.in/

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement