Advertisement

சி.ஏ., ரிசல்ட் வெளியீடு


2019 நவம்பரில் நடத்தப்பட்ட இறுதி தேர்வின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. பழைய பாடத் திட்டத்தில் 57 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அவர்களில் ஒரு பிரிவில் 27 சதவீதம்; மற்றொரு பிரிவில் 23 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு பிரிவு தேர்வுகளிலும் சேர்த்து 10 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதிய பாடத் திட்டத்தில் 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அவர்களில் இரண்டு பாட பிரிவுகளிலும் தேர்வு எழுதிய 15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் பாடப் பிரிவில் 17 சதவீதம்; இரண்டாம் பாடப் பிரிவில் 28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பழைய பாடத் திட்ட தேர்வில் விஜயவாடா கேரளாவின் மன்னார்காடு மற்றும் மும்பை மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். புதிய பாடத் திட்ட தேர்வில் கோல்கட்டா நொய்டா மற்றும் ஆமதாபாத் மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement