Advertisement

எஸ்.ஐ., தேர்வில், பிட் சிக்கிய போலீஸ்காரர்


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில், எஸ்.ஐ., பதவிக்கு, காவல் துறையினருக்கான எழுத்துத் தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. விழுப்புரம் தனியார் கல்லுாரியில் நடந்த தேர்வில், மாவட்டத்தைச் சேர்ந்த, 810 போலீசார் பங்கேற்றனர். ஐ.ஜி., கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார், தேர்வை கண்காணித்தனர்.
தேர்வு மையத்தின் ஒரு அறையில், டி.எஸ்.பி., ரவீந்திரன் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அனந்தபுரம் போலீஸ் நிலைய முதுநிலை காவலர் மணி என்பவர், பிட் அடித்தது தெரிந்தது. மணியை சோதனை செய்தபோது, சட்டம் குறித்த விடைகள் தொடர்பான நான்கு பக்கம், ஜெராக்ஸ் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அவரை, உடனடியாக தேர்வு அறையில் இருந்து, அதிகாரிகள் வெளியேற்றினர். இதனால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் தேர்வு எழுத முடியாது. மேலும், மணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.பி., ஜெயகுமார் தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement