Advertisement

இந்திய வம்சாவளி பேராசிரியர் பணி நீக்கம்

நியூயார்க்: சமீபத்திய, அமெரிக்க - ஈரான் போர் பதற்றத்தின் போது, முகநுாலில் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்ட குற்றச்சாட்டில், அமெரிக்காவின் பாப்சன் கல்லுாரியைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி பேராசிரியர் அஷீன் பான்சே, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில், ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானி, அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி கொல்லப்பட்டார். இதையடுத்து, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம் என, ஈரான் எச்சரித்தது. இதற்கு பதிலடியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானின், 52 முக்கிய கலாசார மையங்கள் மீது குண்டு வீசுவோம் என மிரட்டினார். இது தொடர்பாக, அஷீன் பான்சே, முகநுால் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில், டிரம்புக்கு பதிலடியாக, ஈரான், அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் உள்ள வணிக வளாகம், ஹாலிவுட் நடிகை கர்தஷியான் குடும்பம் வசிக்கும் பங்களா உள்ளிட்ட, 52 இடங்களில், குண்டு வீசலாம் என, தெரிவித்து இருந்தார்.
இதை கண்டித்து, பாப்சன் கல்லுாரி, அஷீன் பான்சேவை பணி நீக்கம் செய்துள்ளது. எத்தகைய வன்முறை கலாசாரமும், மிரட்டல் போக்கும், வெறுப்புணர்வூட்டும் நடவடிக்கைகளையும் கல்லுாரி பொறுத்துக் கொள்ளாது என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தான் கிண்டலுக்காக வெளியிட்ட பதிவை, சிலர் உண்மையாக கருதி விட்டதாக, அஷீன் பான்சே வருத்தம் தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement