Advertisement

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தத்கல் திட்டம் அறிவிப்பு

Share

இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டது. ஜனவரி, 6 முதல், 13 வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதிகளில், விண்ணப்பிக்க தவறியவர்கள், சிறப்பு அனுமதியான, &'தத்கல்&' திட்டத்தின் கீழ், ஆன்லைனில், ஜன., 20, 21ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ள தனி தேர்வர்கள், அரசு தேர்வு சேவை மையங்களுக்கு சென்று, விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். அரசு தேர்வு சேவை மையங்களின் விவரங்களை, http://www.dge.tn.gov என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement