Advertisement

தாய் மொழியை தன் வசப்படுத்தியவர்: வா.செ.குழந்தைசாமிக்கு நீதிபதி பாராட்டு

சென்னை: தமிழ் மொழியை மறக்காமல், தாய் மொழியை தன் வசப்படுத்தி, 6,000 கவிதைகளை இயற்றியவர், குழந்தைசாமி, என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்தார்.
வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், முன்னாள் துணை வேந்தர் வா.செ.குழந்தைசாமியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் மற்றும் தமிழ் குலோத்துங்கன் தமிழ் மேம்பாட்டு விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது.6,000 கவிதைவிழாவில்,
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசியதாவது:
உயர் கல்வியாளர்கள், தாங்கள் பெற்ற பட்டங்களில், பார்த்த துறைகளில், சிகரம் தொட்டிருப்பர். ஆனால், மெல்ல தங்களது தாய்மொழியை மறந்திருப்பர். அவ்வாறு, தமிழில் சரியாக பேச வராது என, பலர் சொல்வதை, நிறைய பார்த்திருக்கிறோம்.தமிழ் மொழியை மறக்காமல், தாய் மொழியை தன் வசப்படுத்தி, 6,000 கவிதைகளை இயற்றியவர், குழந்தைசாமி.
பல கடினமான ஆங்கில வார்தைகளுக்கு, தமிழில் நுால்களை உருவாக்கி உள்ளார். பள்ளியில் சேர்ந்தது முதல், இறுதி வகுப்பு வரை, அனைத்திலும் முதல் இடம் பிடித்தவர் அவர். சமூக அக்கறை இல்லாமல், யாரும் வாழ்க்கையை நகர்த்த முடியாது. தொகுப்பு நுால்சமூக சிந்தனையில், விழித்துக் கொண்ட அவர், மிகப்பெரிய ஆளுமைகளுடன், இளம் வயதிலேயே தொடர்பு வைத்திருந்தார். அவர் சட்டம் பயின்றிருந்தால், உச்ச நீதிமன்றத்தை தாண்டி, சர்வதேச அளவில் சாதனை படைத்திருப்பார். அண்ணா பல்கலை உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்காற்றியவர், குழந்தைசாமி. இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், குழந்தைசாமி பட்டமளிப்பு விழா உரைகளின் தொகுப்பு நுால் வெளியிடப்பட்டது. மேலும், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ராஜசேகர தங்கமணி ஆகியோருக்கு, தமிழ் குலோத்துங்கன் தமிழ் மேம்பாட்டு விருதுகள் வழங்கப்பட்டன. மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமை செயலர் பி.எஸ்.ராகவன், சவுந்தரவல்லி குழந்தைசாமி உட்பட பலர்பங்கேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement