Advertisement

புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு 11 மாதங்களில் புதிய கட்டடம்


திண்டுக்கல்: தமிழகத்தில் 9 புதிய மருத்துவ கல்லுாரிகளுக்கான கட்டடங்கள் 11 மாதங்களில் முடிக்கப்படும் என, திண்டுக்கல்லில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
திண்டுக்கல்லில் நடந்த ரத்த தான முகாமில் அமைச்சர் பங்கேற்றார். பிறகு அவர் கூறியது: இந்தியாவில் ரத்த தானம் வழங்குவதில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. பதினைந்து ஆண்டுகளாக செய்ய வேண்டியதை ஒரே ஆண்டில் செய்து 9 புதிய மருத்துவ கல்லுாரியை தமிழகத்திற்கு பெற்றுள்ளோம்.
திண்டுக்கல் மக்களின் நீண்ட நாள் மருத்துவக் கல்லுாரி கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.137.16 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கட்டடப்பணிக்கு ஜன.7 ல் டெண்டர் விடப்படும். 11 மாதங்களில் 9மருத்துவ கல்லுாரிகளும் கட்டி முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement