Advertisement

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: புரோக்கர்கள் இருவர் சிக்கினர்

தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் புரோக்கர்கள் இருவர் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டில் சேர்ந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து தேனி மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த உதித் சூர்யா, தந்தை டாக்டர் வெங்கடேசன் கைது செய்யப் பட்டனர். இதே பிரச்சனையில் ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் 5மாணவர்களும், 4 பெற்றோரும் ஜாமின் பெற்றனர். மாணவி பிரியங்காவின் தாயார் மைனாவதி சிறையில் உள்ளார்.
இவ்வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட புரோக்கர்கள், தேர்வு எழுதிய போலி மாணவர்கள் சிக்காமல் இருந்தனர்.சிக்கினர்இந்நிலையில் மாணவி பிரியங்காவை மருத்துவக்கல்லுாரியில் சேர்க்க தர்மபுரியை சேர்ந்த எல்.ஐ.சி.ஏஜென்ட் முருகன் புரோக்கராக செயல்பட்டது தெரிந்தது. பெங்களூருவில் பதுங்கி இருந்த அவர் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சிக்கியாக தகவல் வெளியானது. மேலும் அவருடன் தொடர்புடைய புரோக்கர் விஸ்வநாதன் என்பவரும் சிக்கியுள்ளார்.
அவர்களை தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு போலீசார் விசாரணைக்கு அழைத்து வர உள்ளனர்.இதுகுறித்து தேனி சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் சித்ராதேவியிடம் கேட்டதற்கு , விசாரணைக்காக அலுவலகத்திற்கு இதுவரை யாரும் வரவில்லை என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement