Advertisement

சென்னை ஐ.ஐ.டி.,யில் வளாக நேர்காணல்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில், வளாக நேர்காணல் எனப்படும், வேலைவாய்ப்பு முகாம் துவங்கியுள்ளது.
இதில், மைக்ரோசாப்ட், இஸ்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள், ஆட்களை தேர்வு செய்கின்றன. சென்னை ஐ.ஐ.டி.,யில், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும் வளாக நேர்காணல், நேற்று துவங்கியது.
முதல் நாளில், 102 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த மாதம் முழுவதும், நேர்காணல் நடக்கிறது. இதற்கு, 1,334 பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்; 227 நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்கு ஆட்கள் கேட்டு பதிவு செய்துள்ளன. அவற்றில், மைக்ரோசாப்ட், குவால்காம், பாஸ்டன், கோல்டுமேன் ஸாச், இஸ்ரோ ஆகிய நிறுவனங்களும், ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement