LOGIN
dinamalar telegram
Advertisement

சர்வதேச அறிவியல் திருவிழா புதுச்சேரி ஆசிரியர்கள் பங்கேற்பு

Share

புதுச்சேரி: சர்வதேச அறிவியல் திருவிழாவில் புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர்களும், மாணவிகளும் பங்கேற்றனர்.
கொல்கத்தாவில் சர்வதேச அறிவியல் திருவிழா, கடந்த 5ம் தேதி துவங்கி, 8ம் தேதி வரை நடந்தது. இதில், விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சர்வதேச அறிவியல் திருவிழாவில், புதுச்சேரியில் இருந்து அறிவியல் ஆசிரியர்கள் குலசேகரன் (ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி), அனிதா (மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி), கணேசன் (ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி), சுரேஷ் (அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி), ராஜ்குமார் (காட்டேரிக்குப்பம் அரசு உயர் நிலைப் பள்ளி), அரவிந்தராஜா (முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் நடுநிலைப் பள்ளி), பாரதிராஜா (ரெட்டியார்பாளையம் சுப்பையா அரசு உயர்நிலைப் பள்ளி), சோமசுந்தரம் (காலாப்பட்டு அரசு தொடக்கப் பள்ளி), புவி வேளாண் உயிரி கூட்டமைப்பின் இயக்குனர் அருண் நாகலிங்கம் மற்றும் காலாப்பட்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 20 பேர் கலந்து கொண்டனர்.
அறிவியல் ஆசிரியர் ராஜ்குமார், மடிப்பு நுண்ணோக்கி ஆய்வ றிக்கையை இலக்கிய அறிவியல் திருவிழாவில் சமர்ப்பித்தார். புவி வேளாண் அறிவியல் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து, அரசு சாரா அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் அருண் நாகலிங்கம் பேசினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement