Advertisement

பெலிக்ஸ் உதவித்தொகை


கல்வி நிறுவனங்கள்:ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ரீடிங் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் (எஸ்.ஓ.ஏ.எஸ்.,) - லண்டன் பல்கலைக்கழகம்.
படிப்புகள்:முழு நேரமாக எந்த ஒரு துறையிலும் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது டி.பில்., படிப்பு. ஏற்கனவே முதுநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் மீண்டும் ஒரு முதுநிலை பட்டப்படிப்பிற்காக இந்த உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற இயலாது.
உதவித்தொகை விபரம்:முழுமையான கல்விக் கட்டணம், இருப்பிடம் மற்றும் உணவுக்காக ரூ.12 லட்சம் வரை, ஒருமுறை இந்தியாவில் இருந்து யு.கே.,விற்கு சென்று வருவதற்கான விமானக் கட்டணம் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் 5 மாணவர்கள் வரை இந்த உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறலாம்.
தகுதிகள்:* இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.* இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இளநிலை பட்டப்படிப்பை படித்திருக்க கூடாது.* உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் பட்சத்தில், கல்விக் காலம் முடிந்தவுடன் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:உதவித்தொகைக்கு என்று பிரத்யேகமாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. ஜனவரி மாதத்திற்குள் விரும்பும் பாடத்திட்டத்திற்கு உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - ஜனவரி, 2020ரீடிங் பல்கலைக்கழகம் - ஜனவரி 30, 2020எஸ்.ஓ.ஏ.எஸ்., - ஜனவரி 31, 2020
விபரங்களுக்கு: https://www.felixscholarship.org/

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement